Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
கட்டுரை
அடடே !!
சிறுகதை
கவிதை
சிறுகதை
கட்டுரை
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்) - நேசகுமாரின் முடிவுரை
- நேச குமார்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

கடந்த இரு மாதங்களாக தமிழோவியத்தில் வெளிவந்த இந்தத் தொடர் இத்துடன் முடிவுக்கு வருகிற நிலையில், இது குறித்த எனது சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

முதலாவதாக, இந்த படைப்பை சீரிய முறையில் பிரசுரித்து, சில சமயங்கள் நான் தாமதப் படுத்திய போதும் பொறுமையுடன் மடலிட்டு, என்னைத் தொடர்ந்து எழுதவைத்த தமிழோவியம் கணேஷ் சந்திரா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவருக்கு பக்கபலமாய் இருக்கும் தமிழோவியம் குழுவினருக்கும் எனது நன்றிகள்.

இரண்டாவதாக, இதை ஒவ்வொரு வாரமும் பொறுமையுடன் படித்து எனக்கு குறை, நிறைகளை சுட்டிக் காட்டியோர், இத்தொடரைப் பற்றி குழுமங்களிலும், மடல்களிலும் விவாதித்தோர் ஆகிய அனைத்து இணைய வாசகர்களுக்கும், இணைய வாசகர்களிடமிருந்து கட்டுரைகளை வாங்கிப் படித்து என்னை ஊக்குவித்தோருக்கும் எனது நன்றிகள்.

மூன்றாவதாக, இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - இக்கட்டுரைகளைக் கண்டு வெகுளாமல், கருத்துச் சுதந்திரத்தை மதித்து உடன்படாதபோதும் கண்ணியம் காத்தமைக்கு.

இந்த மூன்று சாராருக்கும் நன்றிகளை நவிலும் இவ்வேளையில், உங்களிடையே ஏற்பட்டிருக்கக் கூடிய ஒரு முக்கியமான கேள்விக்கும் எனது விளக்கத்தைத் தர கடமைப்பட்டிருக்கின்றேன். பல வாசக அன்பர்களின் மனதில் கட்டுரையைப் படிக்குமுன்னரே ஏற்பட்டிருக்கக் கூடிய கேள்வி, உலகில் பல பிரச்சினைகள் இருக்க, ஏன் இந்த வஹி பற்றிய ஆய்வு என்பதாகத்தான் இருக்கும் என்று யூகிக்கின்றேன். என்றென்றும் உலகில் நன்மையும் தீமையும் கலந்தே இருந்து வருகின்றன. கீழத்தய மரபுகளின் அசைக்கமுடியா அடிப்படை நம்பிக்கை என்று ஒன்று உண்டு என்றால் , அது இந்த நன்மை-தீமை கலப்பும், இவற்றின் மோதல்களினால் உருண்டு முன்னேறும் உலகம் பற்றிய கோட்பாடாகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆகவே, உலகில் பல பிரச்சினைகள் எப்போதும் இருக்கும். பிரச்சினைகள் இல்லா உலகம் என்பது கனவுலகம் மட்டும்தான்.இவற்றில், இன்றைய உலகை, உலக நாகரிகத்தை, பண்பாட்டை எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல், தீவிர மதப்பிடிப்பு கொண்டு கடவுள் பற்றிய தமது கோட்பாடுகளே உயர்ந்தவை என்றும், மற்றவர்கள் எல்லாம் வழிகேட்டிலும், ஒழுக்கக் கேடான வாழ்க்கை முறையிலும், உண்மையான கடவுளின் கட்டளைகளை புறக்கணித்து அக்கடவுளை அவமதிப்பு செய்பவர்களாக இருக்கின்றனர் என்று நம்பும் மதத்தீவிரவாதிகள். இவர்களது இலக்கிற்கு எதுவும் தப்புவதில்லை -  ருஷ்யாவின் குழந்தைகளாயிருக்கட்டும், நியூயார்க் நகரின் பணியாளர்களாயிருக்கட்டும், லண்டன் நகரின் பயணிகளாயிருக்கட்டும், காஷ்மீரின் பண்டிட்டுகளாயிருக்கட்டும், கோயம்பத்தூர் நகரவாசிகளாயிருக்கட்டும், கீழக்கரையின் இந்துக்களாகயிருக்கட்டும் - இவர்கள் எல்லோரும் உண்மையான இறைவனின் கட்டளைகளைப் புறக்கணிப்பவர்கள், கடவுளுக்கு மாறு செய்பவர்கள், ஒழுக்கக் கேடானவர்கள் ஆதலால் இவர்கள் அழித்தொழிக்கப் படவேண்டியவர்கள், இழிவு படுத்தப் படவேண்டியவர்கள், தத்தமது ஊர்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் வெளியேற்றப் படவேண்டியவர்கள் என்பதே இத்தகைய அடிப்படைவாதிகளின் உறுதியான எண்ணமாயிருக்கிறது.

இதனால், இந்தத் தீவிரவாதிகள் தங்களது அந்தஸ்து, குடும்பம், வேலை எல்லாவற்றையும் துறந்து கடவுளின் பாதையில் போரிடத் தயாராகின்றனர். இத்தகைய தீவிரவாதத்தை வெறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாக, வாய்ப்பில்லாத இளைஞர்களின் விரக்தியில் எதிரொலியாக பார்ப்பது தவறு என்பது இன்று உலக மக்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப் பட்ட ஒன்று - ஒசாமா பின் லேடனுக்கு இல்லாத செல்வவளம் இல்லை. காஷ்மீரிகளின் வாழ்க்கை இந்தியாவின் ஏனைய பகுதிகளில் இருப்போரில் பெரும்பாலானோரை விட வளமானதாகவே இருந்தது, இருக்கிறது. பாலஸ்தீனத்தில் வெளியேற்றப்பட்டவர்களைப்போன்ற பலநூறுமடங்கு
இந்துக்கள், கிறிஸ்துவர்கள் பாகிஸ்தானிலிருந்தும், வங்கதேசத்திலிருந்தும், காஷ்மீரிலிருந்தும் வெளியேற்றப் பட்டுள்ளனர். அவர்களெல்லாம், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதில்லை. ஆகவே, வருமானம் இல்லாதது, எங்கோ ஒரு மூலையில் உள்ள பாலஸ்தீனப்பிரச்சினை, இன்று இருந்துவரும் ஈராக் பிரச்சினை ஆகியவை இவற்றுக்கு காரணம் அல்ல. ஏனெனில் 1400 வருடங்களாக இந்த தீவிரவாதச்செயல்கள் நடந்து வருகின்றன. 'அல்லாஹ¤ அக்பர்' என்ற கோஷத்துடன் அழிக்கப்பட்ட வழிபாட்டுத்தலங்கள், மதம் மாற மறுத்ததற்காக கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டு இதன் காரணமாகவே 'ஹிந்துகுஷ்' என்று அழைக்கப்படுகின்ற பாக்-ஆ·ப்கான் மலைத்தொடர்கள், அடிமைகளாக்கப்பட்டு மிருகங்கள் போல் ஈரானுக்கு இழுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்ட இந்தியர்களின் வரலாறுகள் உலகெங்கும் அதிர்ச்சியுடன் படிக்கப் படுகின்றன. ஆகவே, இந்த தீவிரவாதம் புதிதல்ல.  இந்தியர்களாகிய நாம் இந்த தீவிரவாதத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 1300 வருடங்களாக அனுபவித்து வருகின்றோம்.

இதை எப்படி எதிர்கொள்வது? வன்முறையை வன்முறை மூலம் தீர்க்க முடியாது. போலீஸ் கொண்டு இதை சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக எதிர்கொள்வது ஜனநாயக முறையில் அமைந்த சுதந்திர நாடுகளால் இயலாத ஒன்று. ஏனெனில்,தீவிரவாதச் செயல்களில் ஈடுபடாது அமைதியான முறையில் வாழ்வு நடத்திவரும், சமூகத்தின் பெரும் எண்ணிக்கையில் வசிக்கும் ஒரு மதக்கூட்டம் இதே எண்ணங்களை பிரதிபலிக்கின்றது. உதாரணமாக சென்ற மாதம் நடந்த லண்டன் குண்டு வெடிப்பிற்குப் பிறகு நடைபெற்ற கருத்துக்கணிப்பில் அங்கே வசிக்கும் ஒரு லட்சம் இஸ்லாமியர்கள், மேற்கத்திய வாழ்வு முறை அழித்தொழிக்கப் படவேண்டிய ஒன்று என்ற கருத்தைத் தெரிவித்திருக்கின்றனர். இந்தியாவில் நல்லவேளையாக இப்படிப்பட்ட கருத்துக்கணிப்புகள் நடத்தப்படுவதில்லை. ஆகவே, இவற்றின் மூல காரணத்தை அமைதியான முறையில் ஆய்ந்து விவாதிப்பது, சிந்திப்பது ஆகியவையே ஒரு ஜனநாயக சமுதாயத்தில் சாத்தியமான முறை, சாத்வீக முறை.

ஆகவே, இச்செயல்களுக்கு என்ன காரணம்? நமது சக மனிதர்கள், சகோதரர்கள், என்றோ ஒருநாள் நமது உறவினர்களாக இருந்தவர்கள் மனதில் இத்தகைய மாறுபாடு ஏற்பட்டு அசுரபலத்துடன் நமது வாழ்க்கை முறைய, சமூகத்தை அழித்திட ஏன் இவர்கள் எண்ணுகின்றனர்? மாமன் மச்சான் என்று உறவுமுறை கொண்டாடி, வீட்டு விசேஷங்களுக்கு அழைத்து, நட்புடன் பழகும் நமது அண்டை அயலார்கள், மதவிஷயத்தில் சற்றும் விட்டுக் கொடுக்காமல், எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் வன்செயலகளில் ஈடுபடுவதற்கு என்ன காரணம் என்று ஆய்ந்து, அலசுவது இன்றையமையாத ஒன்றாகிறது.

இதனால்தான் வஹி பற்றிய இந்த ஆய்வுகள் அவசியமாகின்றன.

ஆம், முஸ்லிம் அல்லாதவர்கள் இழிவு படுத்தப் படவேண்டும் என்பது வஹி மூலம் ஏக இறைவன் அறிவித்த ஒன்று. பாகிஸ்தானில் இந்துச் சகோதரரர்களை இழிவுபடுத்தும் அப்பாவி முஸ்லிம்களை குறைசொல்லி பிரயோசனம் இல்லை. கா·பிர்கள் (முஸ்லிம் அல்லாதோர்) அழித்தொழிக்கப் பட வேண்டியவர்கள் என்பது இந்தியாவைப் படையெடுத்துவந்து அழித்த துருக்கியரின் தனிப்பட்ட எண்ணம் அல்ல, அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்த கட்டளை.

கடவுளுக்கு மகன் உண்டு என்று கருதுவோர் தீயோர் என்பது வஹி மூலம் அல்லாஹ் அறிவித்த ஒன்று. கிறிஸ்துவர்களை துன்புறுத்தும் சவுதி அரசை குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும், சுதந்திரமாக செயல்படக்கூடாது என்பது தாலிபான்களின் தீர்ப்பு அல்ல, வஹி மூலம் அல்லாஹ் மனிதகுலத்துக்கு இட்ட கட்டளை. நடத்தை தவறியவர்கள் என்று கருதும் பெண்களை கல்லால் அடித்துக் கொள்வது ஈரான் அரசின் கண்டுபிடிப்பு அல்ல. அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தது, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் ஒரு சமூகத்தையே தாம் கல்லால் அடித்துக் கொன்றதாக அல்லாஹ் வஹி மூலம் அறிவித்துள்ளார்.

பெஸ்லானில் குழந்தைகளைக் கொன்றதற்காக தீவிரவாதிகளைக் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. குழந்தைகளும் எதிரிகளே என்பது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தவொன்று. ஜிஹாத் செய்து எதிரிகளை அழிக்கும்போது அவர்களின் பெண்களை கற்பழிக்கலாம் என்பது நபிகள் நாயகமோ, அல்லது 1400 வருடங்களுக்கு முன்பு நடைமுறையில் இருந்த சமூகங்களின் வழக்கமோ அல்ல. அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தது. தெளிவாக இப்படிப் பிடித்து அடிமைகளாக்கப் படும் பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதை வஹி மூலம் அல்லாஹ் ஹலாலாக்கியிருக்கின்றார்.

மேலும், இதெல்லாம் 1400 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற விஷயங்கள், அப்போது இதுதான் அனைத்து சமூகங்களிலும் வழக்கமாயிருந்தது ஆகவே இப்போது அதெல்லாம் தவறு என்று கருதுவோர்களுக்கும் அல்லாஹ் தெளிவாக அப்போதே வஹி மூலம் அறிவித்திருக்கின்றார், இதெல்லாம் மாற்றமுடியாத கட்டளைகள் -  இறுதித்தீர்ப்பு நாள் வரைக்கும் இவற்றை மு·மீன்கள்(நம்பிக்கையுள்ளோர் - முஸ்லிம்கள்) பின்பற்றப்பட வேண்டியவை, இவற்றை மறுப்பது முஸ்லிம்களுக்கு தடைசெய்யப் பட்ட ஒன்று, அப்படி மாறுபாடு செய்வோர் தலையில் கொதிக்கும் தண்ணீர் ஊற்றப்படும், உருக்கும் செம்பை குடிக்க வைக்கப் படுவார்கள், தீயில் வறுத்து எடுக்கப் படுவார்கள் என்று.

ஆகவே, இத்தகைய மதவாதத்துக்கு, மத அடிப்படைவாதத்துக்கு, இவற்றிலிருந்து வெளிக்கிளம்பும் வன்கும்பல்களுக்கு, அவற்றின் தீவிரவாதச்செயல்களுக்கு, ஊற்றுக்கண்ணாயிருப்பது அல்லாஹ் எனும் அரபி இறைவன், தமது வானவர் ஜிப்ரீல் மூலம் தாம் தேர்ந்தெடுத்த முகமது என்ற நபிகள் நாயகத்துக்கு அறிவித்த
வஹியாகும். இந்த வஹி மூலமே அல்லாஹ் தம்மையும்,ஜிப்ரீலையும்,தமது தூதரையும் நம்பும் மு·மீன்களுக்கு(முஸ்லிம்களுக்கு) எவ்வாறு மாற்று மதத்தோரை நடத்தவேண்டும், அவர்களிடையே எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவர்களை எப்படித்தாக்க வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்டுள்ளார்...... அல்லது, அப்படி நம்பப்படுகிறது!

ஆம், இந்த நம்பிக்கையே இச்செயல்களின் பின்னால் உள்ளது. இந்நிலையில், இந்த வஹி பற்றி ஆய்வு செய்வதும், விவாதிப்பதும் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது. இந்த ஆய்வுகள், தனியொரு மனிதருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் சில ஆன்மீக அனுபவங்களின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்ட மதக்கோட்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து வன்முறையை தவிர்த்து, உலகில் அமைதியை நிலவச்செய்யும். மனிதர்களிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கும் மதப்பிளவுகளை தகர்த்து அனைவரையும் சகோதரர்களாக, நன்பர்களாக, சுதந்திரமாக சிந்தித்து செயல்படுபவர்களாக மாற்றும் என்பதே எனது நம்பிக்கை. அதனை நோக்கிய எனது சிறு முயற்சியே இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்.

இது சம்பந்தமாக விரைவில் இன்னுமொரு முக்கிய அறிவிப்பு தமிழோவியத்தில் வெளியாகும்.

 
உங்கள் கருத்து  
mythili
8/18/2005 , 2:03:18 AM

என்னொவோ இஸ்லமிய தீவிரவாதிகள் மட்டும் தான் உலகத்தில் உள்ளது போல் உள்ளது உங்கள் கட்டுரை. 1984ல் சீக்கியருக்கு எதிராக் நடந்த கலவரம் எந்த வஹியின் அடிப்படையில் நடந்தது. அதுபோல் நக்ஸலைட்டுக்களின் கொடுமைகள், காஷ்மீரில் நம் ராணுவம் நடத்திய பாலியல் கொடுமைகள், இலங்கையில் புலிகள் மற்றும் இராணுவம் நடத்திய கொடூரங்கள்- அதனால் புலம் பெயர்ந்த மக்கள் படும் அவலங்கள், அவ்வளவு ஏன், சத்தியமங்கலம் காடுகளில் வீரப்பன் வேட்டைஎன்ற பெயரால் அதிரடி படை மலைவாழ் மக்களுக்கு அதுவும் பெண்களுக்கு நடத்திய தீமைகள் என்று நீங்கள் மேற்கோள் காட்டிய வஹி வழி அல்லாத நடவுகள் பல.

உங்கள் கட்டுரை நன்றாக உள்ளது, ஆனால் கடல் கடல் கடந்து வந்து, தமிழர்களுக்கான் இணையம் என்ற காரண்த்தால் தமிழோவியம் படிக்கும் அன்பர்களின் மனதில் மததுவேஷத்தை வளர்க்க இந்த கட்டுரை வழிகோலும் என்று அச்சமாக உள்ளது.

ஆசிரியர் அவர்களுக்கு - தமிழோவியம், தமிழர்களை இணைக்கும் பாலமாக இருக்க மட்டுமெ என் போன்ற வாசகர்கள் விரும்புவார்களே தவிர இப்படி சாதி மத வேறுபாடுகளை வளர்க்க அல்ல.
   
R.Balamani
8/18/2005 , 10:51:16 PM

எழுதப்பட்ட கட்டுரையின் நோக்கத்தை இணைய வாசகர்களில் பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளர் என்றே கருதுகிறேன். நேசகுமார் அவர்கள் வாசகர்களுக்கு தெரிவிக்க முனைவது எல்லாம் மதத்தின் பெயரால் நடத்தப்படும் தீங்குகளும் அவற்றின் மூலகாரணங்களும்தான் என நினைக்கிறேன். இஸ்லாதில் மட்டும்தான் தீவிரவாதம் இருப்பதாக அவர் எழுதியதாக எனக்கு ஞாபகமில்லை. எல்லா மதங்களிலும் கொடுமைகள் கொடூரங்கள் புரியும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவையெல்லாம் மதத்தின் பெயரால் நடத்தப்ப்படுவதல்ல. மாறாக அரியாமை, ஒழுக்கமின்மை, சுய நலம் போன்றவைகளாலேயே நடக்கின்றன. கட்டுரையின் நோக்கத்தை துவேஷத்தை வளர்ப்பதாக கருதாமல், ஆரோக்யமான விவாதப்பொருளாக கருத வாசகர்களை வேண்டுகிறேன். அன்புடன்...பாலாமணி.
   
ஷம்சுதீன்
8/20/2005 , 1:01:58 AM

இஸ்லாத்துக்கு இது ஒன்றும் புதுசு கிடையாது. இஸ்லாத்தை பரப்பும் வேலையைத்தான் இவரைப்போன்றவர்கள் செய்து வருகிறார்கள். இவரது வலைப்பதிவை பார்த்து நானே பல தகவல்களை தெரிந்து கொண்டேன், குரானையும் படிக்க ஆரம்பித்துள்ளேன். நேசக்குமார் தாராளமாக எழுதட்டும்.


   
Ibrahim
8/21/2005 , 6:44:11 AM

ஆன்புள்ல் நேசகுமர் அவர்களுக்கு, ஓரு கட்டுரை அதும் பல நன்பர்கள் படிக்கும் இன்னய தளதில் இந்த மதிரி கட்டுரையை கன்டு மனம் வெம்பமல் இல்லை. இருந்தலும் ஒரு தவரை சுட்டி கட்டும் பனி முச்லிம் கு உன்டு. ஈதுமத்ரி கட்டுரைஅக வகும் ஒரு அமைபில் வன்முரை வலர்குமெ டவிர வெரு ஒன்ரும் இல்லை. ஊன்னு அசிரியர் இந்த கட்டுரையல் இந்து முச்லிம் ஒர்ருமைய கலைக்கலம் யென்ரு நினகிரர். அது ஒரு பொதும் முடியது. ஈதர்கு முன்னர் ப்ரிடிஷர் இன்து முச்லிம் ஒர்ருமையெ கலைது சென்ரெனர். ஈதனல் உஙலகு யென்ன லபம் இடைகிரேர்கல் யென்ரு தெரியவில்லை. Mஉச்லிம் கல் வனதிலிருந்து குதிது வரவில்லை. Tமைல்னடு அட்டனை முச்லிம்கலும் ஒரு பொலுது Hஇன்டு வகட் இருந்தனர் யென்பதை வரலரை படிட்து தெரிந்து கொல்லுஙல். ஸெரமன் பெருமல் வரலரை படிது தெரிந்து கொல்லுஙல் நபிகல் நயகம் இருந்த கலதிலெயெ இசலம் கெரலவில் வலர்ந்தது தெரியடொ. ஆசிரியரை கெட்டு கொல்கிரென் இந்த தொடரை உடெனெ நிருதி சகதரர்கலக பலகும் இந்து முச்லிம் கலிகுடையெ மெலும் வலுஓடும் நட்புக் கட்டுரை யெலுதுஙல் இதுதன் நட்டின் ஒர்ருமையெ கொதுகும். ஆசிரியெர் மெலொட்டமக வன்முரை கலை முச்லிம் சமுடையெடனிரை குரி வைது டக்கி இருகிரர். ஈதர்குரிய யெதிபை நன் மர்ரும் அல்ல இன்னும் யஏனடைய இன்து நன்பர்கலெ வலஙுவர்கல்.
   
Shamsu
8/21/2005 , 9:04:59 AM

தமில் நண்பர்களே இக்கட்டுரை ஒரு மேலை நாட்டு கிரிஸ்டுவன் ஓருவனின் புலம்பல். (இஸ்லாம் வளர்வதை அதும் அதிகமாக மேலை நாடுகளில் வளர்வதை பொருக்க முடியாதவன்) தமில் மக்க்ள் எதையும் அப்படியே நம்புபவர்கள் அல்லர். பெரியார், அண்ணா கொள்கைகளால் சீர்கண்டவர்கள். சிந்திகக் கூடியவர்கள். உண்மையை யாரும் மரைக்க முடியாது. மொலிபெயர்பு சைத ஆசிரியரே நீக்க்ள் ஓரு முரையாவது குரானை நபிகள் நாய்கம் வரலரை படித்து உண்மையை அரிந்து இஸ்லாத்தை தல்வி இப்படி ஒரு கட்டுரை மொலிபெய்ர்த்தியதர்காக அல்லாவிடம் மன்னிப்பு கேலுங்கள் , ஓரு கடயுள் அவன் உருவமர்ரவ்ன் யென்ரு உரைத்ததற்காக இன்னல்லா துன்பம் அடைந்தவர் சொந்த ஊரிலிருந்து கொலையாலிகளால் விரட்ட்பட்டவர். கிரிஸ்தவர்களை துன்புருதுமரோ யெனய சமயதவரை துன்புருதுமரொ ஒரு சொல் இல்லை. மாராக திருகுரானில் பிர மதங்களை அவர்களுக்கு அலகாக்கி இருக்கிரேன் யென்ரு உள்ள்து. போரில் கூட பெண்கள்,குலந்தைகள், முதியவர்க்ளை கொள்ளூதல் தடுக்கப்பட்டுள்ளது (படியுன்கள் குரான்.)
   
Kollu Nadeem
8/21/2005 , 9:54:15 AM

Nesakumaraa…
You are not the first, the same old wine in the new bottle.
Araya Samaj already thought about it.
Suthi, nothing but suthi. Thai matham thirumbuthal.
You are line-up with VHP, RSS hidden agenda.
Do research about your own (holy-ugly?)books,
I would suggest you to start with Baghwath Gita…


Regards,
Kollu Nadeem Ahmed
   
Jaya
8/22/2005 , 6:54:13 AM

Mr. Nesakumar, Could I know what was the reason behind selecting this article from a not so famour author and translating in Tamil in this website?? To me the only reason behind this is to attack a religion and to pamper the RSS school of thoughts. Before translating this article, have you ever gathered proper suuportings by reading the proper and original translations of the Quran or other authentic islamic books?
Sir, you have a very good writing skills, why do you want to waste it in these type of articles.
Instead of translating this you and wasting 9 weeks of this website's space and your energy to write this piece which is of no use to atleast 99% of the readers of tamiloviam, you could have translated various useful articles. If your interest is in religious related works, then could have worked on translating the Holy books into our beautiful tamil.
   
Yaaro
8/23/2005 , 7:03:55 AM

மெலே உள்ள பின்னூட்டங்களை பார்க்கும்போது ஓரு ஆழ்ந்த கண்ணோட்டம் இருப்பதாக தெரியவில்லை. கோபத்தினாலும், மேலோட்டமாகவும் இடப்பட்டதாக உள்ளது.
   
நல்லடியார்
8/25/2005 , 3:22:49 AM

அன்புள்ள தமிழோவியம் தள நிர்வாகி/ஆசியருக்கு, நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

நேசகுமார் அவர்கள் 'இந்து' என்ற வகையில் தன் மதக்கொள்கையை எடுத்துச் சொல்லவும், விளக்கம் கொடுக்கவும் உரிமையுண்டு. இஸ்லாத்தின் அடிப்படியை சந்தேகப்படுத்தி விட்டால், தன் மதக் கொள்கை தானாகவே நிலை நிறுத்தப்படும் என்ற தவறான அனுமானத்தில், குர்ஆன் வெளிப்பட்ட விதத்தையும், முகம்மது நபிகளின் மன நிலையையும் அவர் வசதிப்போல் மொழி பெயர்த்து எழுதியுள்ளார்.

மாற்று மதத்தவர் என்ற சலுகையில் தன் கருத்தை இன்னொரு மத நம்பிக்கையின் மீது திணிக்க முற்பட்டுள்ளார். அதையும் நீங்கள் தொடராக வெளியிட்டும், சப்பை கட்டியும் உங்கள் பின்புலத்தைக் காட்டியுள்ளீர்கள்.

எல்ஸ்ட்/நேசகுமாரின் இஸ்லாத்தைப்பற்றிய அறியாமை மற்றும் பிரயோகித்துள்ள இரண்டாம் தர சிந்தனைகளை வைத்து அவரின் மதக் கொள்கைகள் விமரிசிக்கப்
பட்டால் அதையும் தொடராக வெளியிடுவீர்களா?

உங்கள் நேர்மையான பதில் தேவை.

   
Ravi
8/27/2005 , 6:12:38 AM

இந்த வலைத்தளத்தை பார்வையிடுங்கள்:

http://ennamopo.blogspot.com
   
நல்லடியார்
9/12/2005 , 3:10:50 AM

திரு.நேசகுமார் அவர்களின் வஹீ பற்றிய மொழிபெயர்ப்புத் இத்தொடருக்கு மறுப்பு வெளியிட அனுமதித்த தமிழோவியம் ஆசிரியர் குழுவுக்கு எமது அன்பார்ந்த நன்றி.



   
Jameel
9/15/2005 , 12:58:34 PM

This translated article [source] is nothing but a brief of 'SATANIC VERSES', which based on TABAQAT of Ibn Saad and SEERA of Ibn Ishaq.

Please note that Islam is not based on stories but on Quran and authenticated traditions of Prophet Mohammed PBUH.

Jameel
   
Erai Nesan
9/18/2005 , 4:25:31 AM

பல தவறான தகவல்களுடன் அவர்களுக்கு அவர்களுடைய சாகாக்களில் மற்ற மதத்தினரைப் பற்றி என்ன போதிக்கப்படுகிறதோ அதை அப்படியே இங்கே கக்கியிருக்கிறார். இதற்கு பல ஆதாரங்களை காட்ட முடியும். ஒரு சிறிய உதாரணம் - பாகிஸ்தானில் இந்துக்கள் கொடுமை படுத்தப் படுகிறார்கள் என்று இக்கட்டுரையில் இவர் கூறுகிறார், கடந்த வார தினத்தந்தி பாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஓர் இந்து நியமிக்கப்பட்டதை கூறுகிறது.

உண்மை எதுவாக இருந்தாலும் இவர்களைப் பொறுத்தவரை கோல்வார்க்கரும், "சிந்தனை தொகுப்பும்", சுயம் சேவக் சங்கும் என்ன போதிக்கிறதோ அது மட்டுமே சரி.

மூளை சலவை செய்யப்பட்ட இவர்களைப் போன்றோரின் கட்டுரைகளை பிரசுரிகும் முன் அதில் உண்மை உள்ளதா என்று ஆய்ந்து பிரசுரிக்க வேண்டும் என்று தமிழோவியத்தின் பொறுப்பாளர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.
   
இரும்புக்கை மாயாவி
9/19/2005 , 4:32:48 PM

நீங்கள் ஒரு தனி மனிதரோ, இயக்கமோ, நம்பிக்கையோ, கொள்கையோ விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்ட உயரிய விஷயமாகக் கருதினால் எச்சரிக்கை நீங்கள் ஒரு பொய்க்கடவுளைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள்.

பில்லோகிரிட்டிஸ்
   
Ariff
10/2/2005 , 10:53:15 AM

Nesakumaran
You are not the first, the same old wine in the new bottle.
Araya Samaj already thought about it.
You are line-up with VHP, RSS hidden agenda. I suggest to you kindly go the below link, you will get the right answere about Islam in lights of Holy Quran and Sahik hadhees.

http://www.onlinepj.com

By the grace of AlMighty Allah show the right path to you and all of us.
Regards,
Ariff.
   
razmi
10/6/2005 , 3:29:01 PM

அன்புள்ள நேசகுமார் அவர்களுக்கு. இஸ்லாம் சம்பன்தமாக விவாதிக்க தயாரா?
நீங்கள் எக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். திராணி இருன்தால் சொல்லவும்.
ரஸ்மி
   
razmi
10/6/2005 , 3:33:36 PM

விவாதத்திட்கான என் அழைப்பிட்கு shrrazmi@yahoo.com. reply me
   
shaan
10/24/2005 , 8:55:11 AM

இச்ச்லாதின் மீது உல்ல கால்புனர்ர்சியால் ஒரு முட்டால் எதோ கிருக்கியுல்லான்.
   
Feedback Closedஇந்த தொடருக்கான பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டது.
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |